நாட்டுப்புறவியல் அலகு - 1

1) நாட்டுப்புறவியல் சொல் விளக்கம் 
🌷நாட்டுப்புறவியலைக்  குறிக்கும் Folklore என்ற சொல் 1846ல் வில்லியம் ஜான் தாமஸ் அவர்களால் உருவாக்கப் பெற்றது. 
🌷Folklore என்பது Folk , Lore என்ற இரு சொற்கள் இணைந்ததாகும். 
🌷19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் என்ற சொல் விவசாய மக்களை குறித்தது. பின்னர் படிப்பறிவில்லாத நாட்டுப்புற மக்களை குறித்தது.
🌷 Lore என்ற சொல்லுக்கு மரபுச் செய்தி தொகுதி என்றும் வழக்காறு என்றும் பொருள் கொள்ளலாம்.
🌷நாட்டுப்புறவியல் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்குகளை மட்டுமே குறிப்பதாக இருந்தது . ஆனால் காலப்போக்கில் வழக்காறுகளைப் பற்றி ஆயும் ஆராய்ச்சியையும் குறிப்பதாயிற்று என  ரஷ்யப் பேரறிஞர் செக்கலோவ் கூறுகிறார் .
🌹நாட்டுப்புறவியல் என்ற சொல் பண்பாட்டு இனவியல் எனப் பொருள்படுவது என்கிறார் ஜேம்சன். இவ்வியல்புக்கு வேண்டிய மூலப் பொருள்களாக பண்டை புராணங்கள் , பழைய மரபு கதைகள் பாடல்கள் , கதைகள் போன்றவற்றை குறிப்பிடுவார் .
🌷புராண மரபுக் கதைகள் ,  கதைகள் , பழமொழி , விடுகதை , பாடல் , கலையின் கூறுகள் அனைத்தின் அறிவையும் நாட்டுப்புறவியல் என்ற சொல் உணர்த்துகிறது என மானிடவியல் பேரறிஞர் வில்லியம் பாஸ்கம் கூறுகிறார்.
🌷நாட்டுப்புறவியல் என்ற சொல் விளக்குகளை மட்டுமன்றி அது பற்றி ஆராயும் ஆய்வையும் குறிப்பதால் தான்  நாட்டுப்புறவியல் என்பது ஓர் அறிவியல்
 ( Folklore is an historical science ) என்று அலெக்சாண்டர் கிராபி குறிப்பிட்டுச் சொல்கிறார் .
🌷நாட்டுப்புறவியல் என்ற சொல் நாட்டுப்புற மக்களின் வழக்கங்கள், நம்பிக்கைகள் , மரபுகள் , பாடல் , கதை , பழமொழி , விடுகதை , மந்திர தந்திரங்கள் ஆகியவற்றைக் குறிப்பதோடு ஒரு தனி மனிதர்களின் கூட்டு முயற்சியாக பரிணமிப்பதோடு மாற்று வடிவங்கள் மீண்டும் மீண்டும் வருதலுமாகிய பண்புகளையும் கொண்டது என மரியா  லீச் குறிப்பிடுகின்றார் .

2) நாட்டுப்புறவியல் பொருள் வரையறை
🌷எழுத்து வழக்கற்ற வாய் மொழி சார்ந்த பண்பாடு அனைத்துமே நாட்டுப்புறவியல் போர்ட் கின் கூறுகிறார் .
🌷பண்டைய நம்பிக்கைகள் வழக்கங்கள் பற்றிய அறிவியலே நாட்டுப்புறவியல் என ஸ்ரிஃபன்பியூக்ஸ் கூறுகிறார் .
🌷மரபுவழியாக வழங்கப்படும் வழக்காறுகள் ஒரு தலைமுறையினரிடம் இருந்து மற்றொரு தலைமுறையினருக்கு பரவுவதை பற்றி ஆராய்வதே நாட்டுப்புறவியல் ஆகும் என ஆர்ச்சர் டெய்லர் குறிப்பிடுகின்றார்.
🌷நாட்டுப்புறவியல் என்பது மக்களது பண்பாட்டு ஆய்வு என தியோடர் கஸ்டர் கூறுகின்றார் .
🌷வாய்மொழியாக பரப்பப்படும் இலக்கியமே நாட்டுப்புறவியல் என பிரான்சிஸ் லீ உட்லி வரையறை செய்கிறார்.
🌷நாட்டுப்புறவியல் என்பது மரபு சார்ந்த நாட்டுப்புற மக்களின் அறிவியல் என ஜோன்ஸ் பாலிஸ் வரையறை செய்கிறார்.  
🌷மக்களது பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் சடங்குகள் ஆகியவற்றில் காணப்படும் பதிவு பெறா மரபுகளை ஆராயும் அறிவியலே நாட்டுப்புறவியல் என குரோகன் டை  குறிப்பிடுகின்றார்.
🌷இன்றுவரை நாகரீக சமுதாயத்தில் உள்ள கல்லாத மக்களிடையே எஞ்சியுள்ள நம்பிக்கைகள், வழக்கங்கள் , மரபுகள் , புராணங்கள் , பழமரபுக் கதைகள் , மூட நம்பிக்கைகள் , சடங்குகள் , மரபு விளையாட்டு பாடல்கள் , கலைகள் ஆட்டங்கள் முதலியவற்றைப் பற்றி ஆராயும் இயல் நாட்டுப்புறவியல் என்கிறார் ஜான் எல். மிஷ்.

3) உலக அளவில் நாட்டுப்புறவியலின் வரலாறு 
           நாட்டுப்புற இயலின் வரலாற்றை அறிய நாட்டுப்புறவியல் அறிஞர்களின் பணியை தொகுத்து நோக்குவது இன்றியமையாத ஒன்றாகும்.இது நாட்டுப்புற இயலின் வரலாற்றை ஓரளவு அறிந்து போன்றாகும்
ஜேக்கப் கிரீம் (கி.பி. 1785 - 1863)
🌴ஜேக்கப் கிரீம் அவர்கள் நாட்டுப்புறவியல் அறிவியல் அடிப்படையில் ஆராய வழிவகுத்தவர். 
🌴இவரை நாட்டுப்புற இயலின் தந்தை ( Father of folklore science ) என்பர் .
🌴மொழியியல் துறையில் ஜெர்மன் மொழியை ஆராய்ந்த பொழுது க்ரீம்ஸ் விதி என்ற ஒலியியல் விதி ஒன்றை உருவாக்கினார்.
🌴இவர் ஒப்பியல் ஆய்வு முறையை நாட்டுப்புறவியலும் பயன்படுத்த தொடங்கினார்.
🌴சுவார்ட்ஸ் , மென் ஹார்ட் , மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் கிரீமின் கோட்பாடுகளை பின்பற்றினர் .
🌴ஜேக்கப் கிரீமின் கோட்பாடுகளை மாக்ஸ்முல்லர் அவர்கள் ஒரு பள்ளி ஆகவே ( Mythological school )உருவாக்கிவிட்டார் .
இப்பள்ளியை ஒப்பியல் பள்ளி ( Comparative school  )என்றும் கூறுவர்.
தியோடர் பென்பே ( கி.பி. 1809 - 1901 )
🌴இவர் கிபி 1859ஆம் ஆண்டு பஞ்சதந்திரக் கதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்ததோடு அழகிய முன்னுரை ஒன்றும் எழுதினார் .
🌴நாட்டுப்புற கதைகளில் காணப்படும் ஒற்றுமைக்கு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு கதை பரவுவதே காரணம் என இவர் கருதியதால் இவரது கோட்பாட்டை புலம்பெயர்வு கோட்பாடு (  Migration theory)என்பர். 
🌴சிலர் இதனை கடன் வாங்கல் ( Theory of borrowing ) என்றும் குறிப்பிடுவர்.
🌴இவரது கோட்பாட்டின் அடிப்படையில் பென்பே பள்ளி (Benfey school )எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
அடல் பெர்ட் குகன் ( கி.பி. 1812 - 1881 ) 
🌴ஜேக்கப் கிரீமை போலவே இவரும் ஒப்பு மொழியியல் அடிப்படையில் நாட்டுப்புறவியல் ஆராய்ந்தார்.
🌴 இவர் புராணங்களை மேல்நிலைப் புராணங்கள் , கீழ்நிலைப் புராணங்கள் என இருவகையாகப் பகுக்கின்றார்.
மாக்ஸ்முல்லர்  ( கி.பி. 1823 - 1900)
🌴சமஸ்கிருத பேரறிஞரும் மொழி இயல் வல்லுனருமான மாக்ஸ்முல்லர் புராணவியல் ஒப்பாய்வில்  மிகுந்த ஈடுபாடு உடையவர் .
🌴இந்தோ-ஐரோப்பிய புராணங்களின் தோற்றத்தை ஆராய்ந்தவர்.
🌴பெரும்பாலான புராணங்களுக்கு இயற்கையின் படைப்பான சூரியனுடன் தொடர்பு இருப்பதாக கருதுவதால் இவரது கோட்பாடு  Solar Theory என்று கூறுவர்.
சுவார்ட்ஸ்
🌴அடல் பெர்ட் குகன் போன்று எல்லா புராணங்களுக்கும் இடி மின்னல் தான் அடிப்படைக் காரணம் என்பது இவரது கோட்பாடாகும் .
🌴இதைத்தான் Storm theory  என்பர்.
🌴இருட்டுக்கு மொழிக்கும் இதையே தான் பல புராணக்கதைகள் எழுந்தன என்பது இவர் வாதமாகும் . 
டெய்லர்
🌴மானிடவியல் பேரறிஞர் டெய்லர் மனித இனத்தின் தொழில் வரலாறு பற்றிய ஆய்வுகள் ( Researches into the Early History of Mankind )என்ற நூலையும் தொல் பண்பாடு ( Primitive culture, 2 vols )என்ற நூலையும் வெளியிட்டார்.
 🌴இவ்விரண்டு நூல்களுக்கும் மானிடவியல் துறையில் தனி இடம் உண்டு எனின் அதன் சிறப்பை நன்கு அறியலாம்.
லாங்க் 
🌴இவர் Myth,  ritual and religion  என்ற நூலை எழுதியுள்ளார்.
🌴இவர் மாக்ஸ்முல்லர் கோட்பாட்டை எதிர்த்தே வந்துள்ளார்.
தாமஸ் நைட்லி
🌴இவர் ஜரிஷ் நாட்டைச் சேர்ந்தவர் .
🌴இவரது The fairy mythology , Tales and popular fiction என்ற இவ்விரண்டு நூல்களும் உப்பு நாட்டுப்புறவியலின் மிகச் சிறந்த நூல்களாக கருதப்படுகின்றன .
வில்லியம் தாமஸ் 
🌴நாட்டுப்புற இயல் வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் இவரே .
🌴இவர்தாம் கிபி 1846ஆம் ஆண்டு Folklore என்ற சொல்லை உருவாக்கினார்.
 🌴இச்சொல் உருவாக்கிய பின்புதான் நாட்டுப்புறவியல் ஆய்வு அறிவியல் ஆய்வாக மாறத்தொடங்கியது.
🌴இச்சொல்லை உருவாக்கியதோடு கிபி 1878ஆம் ஆண்டு நாட்டுப்புறவியல் கழகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது .
🌴உலகிலேயே முதன் முதலில் துவங்கப்பட்ட கழகம் இதுதான். 
🌴இவரே இயக்குனராகவும் கௌரவ செயலாளராகவும் இருந்து பணியாற்றினார் .
🌴Folklore Record என்ற இதழையும் நடத்தினார் பின்னர் இது Folklore  என்ற பெயரில் வெளிவந்தது.
🌴நாட்டுப்புற இயலுக்கு வித்திட்டவர்கள் முதன்மையானவர் வில்லியம் தான் அவர்களை ஆவார் .
🌴நாட்டுப்புற இயலுக்கு வித்திட்ட பெருமையும் நாட்டுப்புறவியலின் வரலாற்றில் முதலிடமும் இவருக்கு உண்டு.
ஜேம்ஸ் ஜார்ஜ் பிரேஜர் 
🌴இவர் பல தொகுதிகளை கொண்ட என்ற உலகப் புகழ்பெற்ற The Golden Bough நூலை எழுதியுள்ளார் .
🌴பழங்குடி மக்கள் அது வழக்கங்கள் சடங்குகள் கதைகள் போன்றவற்றை எல்லாம் சேகரித்து அளித்துள்ளார்.
🌴இந்நூல்  உள்ள வரை இவரது புகழ் அழியாது நிலைத்து நிற்கும் .நாட்டுப்புறவியல் துறையில் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கார்லே குரோகன் 
🌴இவர் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார் பல்கலைக்கழகம் தான் உலகிலேயே முதன்முதலாக நாட்டுப்புறவியல் கோரிக்கையை ஏற்படுத்தியது.
🌴நாட்டுப்புற கதைகள் எந்த நாட்டில் தோன்றி எந்தெந்த நாட்டிற்கு பரவினர் என்பதை பற்றியெல்லாம் ஆராய்ந்தார்.
 🌴ஒரு கதையின் வரலாறும் அது சென்ற இடங்களை பற்றி ஆராயும் ஆய்வு வரலாற்று நிலவியல் முறை என்பர் .
ஆன்டி  ஆர்னே
🌴ஆன்டி ஆர்னே அவர்கள் குரோகனின் மாணவர் ஆவார்.
🌴1913 ஆம் ஆண்டு Principles of the comparative study of tales என்ற நூலும் , 1910ஆம் ஆண்டு Index of the subject of tales என்ற நூலை வெளியிட்டார்.
 🌴இவ்விரண்டு நூல்களும் நாட்டுப்புறவியல் துறையில் மிக முக்கிய நூல்களாகும்.
ஸ்டித்  தாம்சன்
🌴நாட்டுப்புறவியல் வளர்த்த அறிஞர்களுள் இவரும் ஒருவர் என கூறலாம்.
🌴ஆன்டி ஆர்னேயின் நூலை ஒட்டி  Motif Index of Folk Literature என்ற தலைப்பில் 7 தொகுதிகளை வெளியிட்டார்
விளாடிமிர் பிராப்
🌴ருஷ்ய நாட்டுப்புறவியல் பேரறிஞர் விளாடிமிர் பிராப்பின் நாட்டுப்புறக் கதையின் உள்ளமைப்பு ( Morphology of Folk tales ) என்ற நூல் வெளியானதை தொடர்ந்து நாட்டுப்புறவியல் ஆய்வு துறையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது எனலாம்.
🌴இந்நூல் கிபி  1958 ஆம் ஆண்டு வெளியாயிற்று .

4) இந்தியாவில் நாட்டுப்புற இயலின் வரலாறு 
இந்தியாவில் நாட்டுப்புறவியல் துறை தனி ஒரு சரியாக வளரவில்லை.
சில முன்னேற்றங்கள் காணப்படினும் இத்துறை இன்னும் குழந்தை நிலையிலேயே உள்ளது என கூறலாம்
பண்டைக்காலம்
உலகின் பழம்பெரும் நூல்களில் ஒன்றான ரிக் வேதத்தில் பழமையான நாட்டுப்புற பாடல்களையும் கதைப் பாடல்களில் காணலாம். 
பஞ்சதந்திரம் இந்திய நாட்டுப்புறவியல் இலக்கியத்தின் தலையாய மூலமாகும்.
வேத இலக்கியங்களில் சுத்தப்படும் கதைகளை கதைப்பாடல்களின் தொன்மை பிரதிநிதி எனலாம் .
தற்காலம்
சார்லஸ் கோவாரின் தென்னிந்திய நாட்டுப்புற பாடல்கள் என்ற நூல் இந்திய நாட்டுப்புற பாடல் வரிசையில் வெளிவந்த முதல் நூலாகும். 
 தேசப் பற்று மொழிப் பற்றின் காரணமாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது பண்பாட்டு மரபைக் பாதுகாக்க விழிப்புற்று எழுந்தனர்.
மொழிவாரி மாநிலங்கள் தோன்றிய பின்னர் வட்டார நாட்டுப்புறப் பண்பாடு குறித்த விழிப்புணர்வு வளர்ச்சியுற்றது.
காஷ்மீர் இயற்கை அழகு மிகுந்த நாடு. காஷ்மீர் மக்கள் இலக்கியம் என்னும் நூலை சோமநாத் தார் என்பார் வெளியிட்டார்.
இமாச்சலப் பிரதேசம் மலைப் பிரதேசம் ஆகும். இங்கு வாழும் மக்கள் வாழ்வில் காதலும் இசையும் ஒன்றர கலந்து விட்டதே என்று கூறலாம். ஏ.இ. டிரகொட்டா என்பவர் வடமேற்கு இமாச்சல பகுதியில் வழக்கிலிருக்கும் நாட்டுப்புற பாடல்களை ஆராய்ந்து வெளியிட்டார்  .
வீரத்தின் விளைநிலமாக கருதப்படுவது பஞ்சாப்.  இந்தியாவில் பல துறைகளிலும் முன்னேறிய மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று.  இந்தியாவின் காக்கும் கரமாக திகழ்கின்றது எனின் மிகையாகாது.  நாட்டுப்புறவியல் பேரறிஞர் தேவேந்திர சத்யார்த்தி என் மக்களை சந்தியுங்கள் என்ற சிறந்த நூல் ஒன்றை ஆக்கியுள்ளார் நாட்டுப்புறவியல் துறையில் இது சிறந்த நூலாக கருதப்படுகிறது.
மிகுந்த நாட்டுப்புற இலக்கியங்களை கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம். நாட்டுப்புறவியல் துறையில் மிகுந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது  .கே.பி. பகதூர் என்பவர் உத்திரப்பிரதேச நாட்டுப்புறக்கதைகள் என்னும் நூலை வெளியிட்டுள்ளார் . நாட்டுப்புறவியல் பேரறிஞர் தேவேந்திர சத்யார்த்தி அவர்கள் போஜ்பூரி நாட்டுப்புற பாடல்கள் என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பாண்டே அவர்கள் குமார் மக்கள் இலக்கியம் என்னும் நூலை வெளியிட்டுள்ளார் .
நாட்டுப்புறவியல் துறைக்கும் மானிடவியல் துறைக்கும் பீகார் மாநிலம் சொர்க்க பூமியாக திகழ்கின்றது.மானிடவியல் பேரறிஞர் இயல்பு வித்யார்த்தி அவர்களுடன் இணைந்து நாட்டுப்புற ஆய்வில் பீகார் என்னும் நூலை வெளியிட்டு உள்ளனர் பிரசாத் அவர்களும் கீதா சென்குப்தா அவர்களும் இணைந்து நாட்டுப்புறவியல் ஒரு நூலடைவு எனும் நூலை வெளியிட்டனர். ஜான் கிறிஸ்டியன் என்பவரால் பீகார் பழமொழிகள் எனும் நூல் வெளியிடப்பட்டது.
நாட்டுப்புறவியல் துறையில் முன்னணியில் நிற்கின்ற மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்றாகும் நாட்டுப்புறவியல் துறை அறிவியல் துறையாக ஆக்கிய பெருமை பங்கு உண்டு.லால் பிஹாரி அவர்களது வங்காள நாட்டுப்புறக் கதைகள் எனும் நூல் இத்துறையில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. 

Popular posts from this blog

சங்க இலக்கியம் - II அலகு - 5 பட்டினப்பாலை

சங்க இலக்கியம் - II அலகு - 4 சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியம் - I அலகு - 5 புறநானூறு ( 10 பாடல்கள் )